இரவில் உங்களது உடல் வெப்பநிலையானது குறைந்து கால் விரல்கள், கணுக்கால்கள் குளிர்ச்சி அடைந்தால் அது யூரிக் அமிலத்தின் அறிகுறியாக இருக்கலாம்.
இரவு நேரத்தில் உங்களது பாதங்களில் எரிச்சல் மற்றும் வீக்கம் ஏற்பட்டால் அது யூரிக் அமில அளவுகள் அதிகமாக இருப்பதற்கான அறிகுறியாகும்.
தினமும் இரவு நேரத்தில் உங்களது மூட்டில் வலி, வீக்கம். மரத்துப் போதல் போன்றவை ஏற்பட்டால் அது யூரிக் அமிலம் அதிகமாக இருப்பதற்கான அறிகுறி.
மூட்டுகளில் சிவந்த வீக்கம், ஊசி குத்துவது போன்ற வலி ஆகியவை யூரிக் அமிலத்தின் அறிகுறியாக இருக்கலாம்.
உடலில் யூரிக் அமிலம் அதிகரித்தால் சிலருக்கு இரவில் கடுமையான காய்ச்சல் மற்றும் தூக்கமின்மை ஏற்படலாம்.
இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், துர்நாற்றம் வீசும் சிறுநீர் போன்றவையும் யூரிக் அமிலம் அதிகரித்தால் காணப்படலாம்.
மேற்கூறிய அறிகுறிகள் தென்பட்டால், சுயமாக நோய் கண்டறிய முயற்சிக்காமல், மருத்துவரை அணுகவும். அதன் பிறகு மட்டுமே நோயை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
இரவில் தாமதமாக சாப்பிட கூடாதாம்! ஏன் தெரியுமா?
எடையை குறைக்க தேங்காய் எண்ணெய்!! எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?
இளம் வயதினரிடம் தென்படும் சர்க்கரை நோய் அறிகுறிகள்!!
தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்