தற்போதைய செய்திதமிழ்நாடுசினிமாஆட்டோவர்த்தகம்விளையாட்டுலைஃப்ஸ்டைல்ஜோதிடம்இந்தியாஉலகம்கேலரிவேலை வாய்ப்புதொழில்நுட்பம்ஆரோக்கியம்KEA 2025ஆன்மிகம்

DSP ரேங்கில் இருந்த "சீசர்" என்ற மோப்பநாய்.. உடல் நலக்குறைவால் இறப்பு - 12 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்!

Ansgar R | Updated : Jun 28 2024, 10:18 PM IST

Thanjavur : பல வருடமாக காவல்துறையினருக்கு பல வகையில் உதவிய சீசர் என்ற மோப்பநாய் இறந்துள்ளது, தஞ்சாவூர் காவல்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை காவல் பிரிவில், கடந்த 2015ம் ஆண்டு முதல், கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் வெடிமருந்து மற்றும் வெடிப்பொருட்களை கண்டறியும் பிரிவில் பணிபுரிந்து வந்த மோப்பநாய் தான் சீசர். தஞ்சாவூருக்கு முதல்வர் மற்றும் பிரதமர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வரும்பொழுது சீசர் தான் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த சீசர், தனது ஒன்பதாவது வயதில் இன்று உயிரிழந்துள்ளது. இதனை அடுத்து தஞ்சை டிஐஜி அலுவலகம் பின்புறத்தில் உள்ள இடத்தில், 12 குண்டுகள் முழங்க அரசு மரியாதையோடு சீசர் என்கின்ற அந்த மோப்ப நாயின் உடலானது அடக்கம் செய்யப்பட்டது. 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் உள்ளிட்ட பல முக்கிய காவல்துறை அதிகாரிகள் சீசருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

04:58விஜய் போடும் அதிரடி மாஸ்டர் பிளான்..அப்போ 2026?? | TVK Vijay | TVK | Exclusive04:39ஆ.இராசா திருமணத்தில் நடனமாடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.03:22இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக குணா குகை கம்பிகளுக்கு நடுவே சென்று ரீல்ஸ் எடுத்த இளைஞரால் பரபரப்பு !03:03கடந்த 11 ஆண்டுகளில், மிகப் பெரிய சாதனைகளை புரிந்துள்ளது பாஜக அரசு - அண்ணாமலை பேச்சு !17:17பாமக மக்களை ஏமாற்றுகிறது பாஜக பின்னால் இருந்து இயக்குகிறது ராமதாசை - சிவசுப்பிரமணியன் பேட்டி06:02தமிழ்நாடு முதலமைச்சரை பார்த்து தான் ஒன்றியமே இன்று பதற்றத்தில் உள்ளது ! அமைச்சர் சேகர்பாபு பேட்டி!03:11கிழக்குக்கரையில் அருள்பாலிக்கும் அக்களூர் மாரியம்மன் ஆலய மகா கும்பாபிசேகம் ! திரளான பக்தர்கள் வருகை!03:22திமுகவின் தொங்கு சதையான வேல்முருகன் ! "தவெக" கட்சியின் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு !06:13செய்தியாளர் கேள்விக்கு பதிலளிக்காமல் ஓடிய மேயர் பிரியா03:52பெங்களூர் சம்பவம் மிகுந்த வருத்தம் ரசிகர்கள் சிறிது நிதானமாகவும் செயல்பட வேண்டும் - ஷாரூக்
Read more