Malayalam English Kannada Telugu Tamil Bangla Hindi Marathi
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • குறட்டை பிரச்சினையை தீர்க்கும் எளிய வழி!! இனி சத்தமே வராது

குறட்டை பிரச்சினையை தீர்க்கும் எளிய வழி!! இனி சத்தமே வராது

இந்த பதிவில் குறட்டை வராமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.

Kalai Selvi | Updated : Jun 13 2025, 01:40 PM
1 Min read
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • Google NewsFollow Us
15
குறட்டை விடுவதை நிறுத்துவது எப்படி?
Image Credit : others

குறட்டை விடுவதை நிறுத்துவது எப்படி?

குறட்டை பிரச்சனையால் பலரும் அவதிப்படுகிறார்கள். இதனால் அவர்கள் மட்டுமல்ல, அவர்கள் பக்கத்தில் உள்ளவர்களும் ரொம்பவே சிரமப்படுகின்றன. அவர்களால் இரவு நிம்மதியாக தூங்க முடியாமல் போகிறது. ஆனால் சில வாழ்க்கை முறை மாற்றங்களை செய்வதன் மூலம் இந்த குறட்ட பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம் தெரியுமா? அது என்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

25
எந்தப் பக்கம் படுத்தால் குறட்டை வருவது குறையும்?
Image Credit : Getty

எந்தப் பக்கம் படுத்தால் குறட்டை வருவது குறையும்?

நீங்கள் வலது அல்லது இடது பக்கம் திரும்பி படுத்தால் குறட்டை வருவதற்கான வாய்ப்பு குறையும் என்று சொல்லப்படுகிறது.

Related Articles

Snoring Problem: குறட்டை விடுவதால் இவ்வளவு ஆபத்துகளா..? உஷார் மக்களே..நிபுணர்கள் கூறும் அட்வைஸ்..
Snoring Problem: குறட்டை விடுவதால் இவ்வளவு ஆபத்துகளா..? உஷார் மக்களே..நிபுணர்கள் கூறும் அட்வைஸ்..
Snoring Problem: தூக்கம் கெடுக்கும் குறட்டை பிரச்சனைக்கு தீர்வு...நிபுணர்களின் சூப்பர் அட்வைஸ்..
Snoring Problem: தூக்கம் கெடுக்கும் குறட்டை பிரச்சனைக்கு தீர்வு...நிபுணர்களின் சூப்பர் அட்வைஸ்..
35
அதிக எடை
Image Credit : freepik

அதிக எடை

அதிக எடை, வயிற்று கொழுப்பு அதிகமாக இருந்தாலும் குறட்டை வரும். அதிக எடை உள்ளவர்களுக்கு அவர்களின் காற்றுப்பாதைகளில் கொழுப்பு சேரும் வாய்ப்பு உள்ளது. இது காற்றை சரியாக உள்ளேயும், வெளியேயும் செல்லவிடாமல் செய்து குறட்டை பிரச்சனையை அதிகரிக்கிறது. அதனால், முதலில் அதிக எடையை குறைக்க வேண்டும். ஆரோக்கியமான எடையை பராமரித்தால்.. குறட்டை குறையும் வாய்ப்பு உள்ளது.

45
மது அருந்துதல், புகை பிடித்தல்
Image Credit : our own

மது அருந்துதல், புகை பிடித்தல்

பலர் இரவில் மது அருந்துவது, புகைபிடிப்பது போன்றவை செய்கிறார்கள். இவற்றாலும் குறட்டை வரும் வாய்ப்பு உள்ளது. அதனால்.. இரவு படுக்கைக்குச் செல்லும் முன் இவற்றை எடுத்துக்கொள்வதை நிறுத்த வேண்டும். உண்மையில் முற்றிலுமாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால்.. குறைந்தபட்சம் தூங்குவதற்கு முன் நிறுத்த வேண்டும்.

நீர்ச்சத்து..

உடலில் நீர்ச்சத்து குறைந்தால் மூக்கு, தொண்டை வறண்டு காற்றுக்கு தடையாக மாறும். நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, படுக்கைக்குச் செல்லும் முன் சூடான தேநீர் அருந்துவது குறட்டை பிரச்சனையை குறைக்கும்.

55
இரவு அதிகமாக சாப்பிடுவது
Image Credit : Getty

இரவு அதிகமாக சாப்பிடுவது

தூக்கத்திற்கு முன் அதிகமாக சாப்பிடுவது குறட்டைக்கு வழிவகுக்கும். குறைந்தது 2-3 மணி நேரத்திற்கு முன்னரே சாப்பிடுவதை முடிப்பது நல்லது.

தூக்க சுழற்சி..

நல்ல தூக்க சுழற்சியை பின்பற்ற வேண்டும். அதாவது.. ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் தூங்குவது, ஒரே நேரத்தில் எழுவது பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும்.. வழக்கமாக யோகா, தியானம் போன்றவை செய்ய வேண்டும். இவற்றைச் செய்வதன் மூலமும் குறட்டையைக் குறைக்கலாம்.

மேலே உள்ள குறிப்புகளைப் பின்பற்றினால், தூக்கத்தின் தரம் மேம்படும். ஆனாலும் குறட்டை தொடர்ந்தால், மருத்துவரை அணுகுவது நல்லது.

Kalai Selvi
About the Author
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். Read More...
வாழ்க்கை முறை
ஆரோக்கியம்
 
Recommended Stories
Top Stories