இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் தலைவர் முகமது சின்வார் சமீபத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தினார். சின்வார் அக்டோபர் 2024 இல் தனது சகோதரர் யஹ்யா சின்வாரின் மரணத்திற்குப் பிறகு ஹமாஸ் தளபதியாகப் பொறுப்பேற்றார்.
அமெரிக்காவில் படிக்கும் சர்வதேச மாணவர்கள் தங்கள் கல்லூரிக்குத் தெரிவிக்காமல் படிப்பை நிறுத்தினால் அல்லது வகுப்புகளைத் தவிர்த்தால் அவர்களின் மாணவர் விசாக்கள் ரத்து செய்யப்படும் என்று அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.
சவூதி அரேபியா 2026க்குள் மது அருந்துதல் தடையை நீக்கும் என்ற செய்திகளை மறுத்துள்ளது. இஸ்லாமியக் கொள்கைகளின்படி மதுபானத் தடையை நிலைநிறுத்துவதில் நாடு உறுதியாக உள்ளது.
காஷ்மீர், நீர் பங்கீடு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
கனடாவில் பொருளாதார மந்த நிலையால் 1,00,000 வேலையிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்படுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நடவடிக்கை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா-குவைத் இடையிலான 250 ஆண்டுகள் பழமையான நட்புறவை நினைவுகூரும் வகையில், "ரிஹ்ல-இ-தோஸ்தி" என்ற சிறப்பு கண்காட்சி குவைத் தேசிய நூலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆவணங்கள், புகைப்படங்கள், உள்ளிட்ட பல பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் ஐபோன்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்ற அதிபரின் வலியுறுத்தலுக்கு மத்தியில், ஆப்பிள் 25% வரியைச் செலுத்தி வெளிநாடுகளிலேயே உற்பத்தியைத் தொடர விரும்புவதாகத் தகவல்.